Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் படம் பார்த்தபின்னர் விஜய்யின் ரியாக்‌ஷன் என்ன? வைபவ் பகிர்ந்த தகவல்!

கோட் படம் பார்த்தபின்னர் விஜய்யின் ரியாக்‌ஷன் என்ன? வைபவ் பகிர்ந்த தகவல்!

vinoth

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:29 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் இன்னும் 3 தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இன்னும் 3 தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கியது. விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் டிக்கெட் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆன்லைனிலேயே விற்பனை நடக்கிறது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள வைபவ் ஒரு நேர்காணலில் பேசும்போது “கோட் படத்தைப் பார்த்த பின்னர் விஜய் சார் என்னிடம் “என் அனுபவத்துல சொல்றேன். இந்த படத்துல எல்லாமே இருக்கு. அதனால கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் ஆகும் என நம்பிக்கையாக சொல்லியுள்ளார்” எனப் பகிர்ந்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் குரலில் கவனம் ஈர்க்கும் கார்த்தியின் ‘மெய்யழகன்’ பட பாடல்!