Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு!

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் 'வைகைப்புயல்'  வடிவேலு!
, வியாழன், 3 மார்ச் 2022 (17:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தில்     பிரபல நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. இப்படத்தை அடுத்து, இயக்கு நர் திலீப்குமார் சொன்ன கதை நடிகர் ரஜினிக்குப் பிடித்துப் போனது. எனவே ரஜினியின் 169 வது படத்தை திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில், இப்படத்தில்  காமெடி வேடத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாகவும், ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கி வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயக்கிய ட்ரைலர்… உடனடியாக தேதிகளைக் கொடுத்த சிம்பு!