Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மயக்கிய ட்ரைலர்… உடனடியாக தேதிகளைக் கொடுத்த சிம்பு!

மயக்கிய ட்ரைலர்… உடனடியாக தேதிகளைக் கொடுத்த சிம்பு!
, வியாழன், 3 மார்ச் 2022 (16:54 IST)
நடிகர் சிம்பு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் சிம்பு இல்லாத காட்சிகளை எல்லாம் படமாக்கி முடித்துள்ளார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வரும் சிம்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். சிம்புவுக்காக பத்து தல படப்பிடிப்பு குழு நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. இந்நிலையில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்து எடிட்டர் கே எல் பிரவீன் ஒரு டிரைலரை உருவாக்கிக் கொடுக்க, அதை சிம்புவிடம் காட்டியுள்ளனர் படக்குழுவினர். அதைப் பார்த்து ஈர்க்கப்பட்ட சிம்பு அடுத்த மாதத்தில் மொத்தமாக் 22 நாட்கள் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்து தன்னை வைத்து எடுக்கவேண்டிய மொத்தக் காட்சிகளையும் எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 18 ல் தொடங்குகிறது சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!