Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சூர்யா படத்தில் நடிக்கவுள்ள வடிவேலு !

நடிகர் சூர்யா படத்தில்  நடிக்கவுள்ள வடிவேலு !
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (20:12 IST)
சூர்யா-40 படத்தில்  நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாகத் தகவல் வேகமாகப் பரவிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியாகிப் பெரும் வெற்றிப் பெற்ற படம் சூரரைப் போற்று.

இப்படம் சமீபத்தில் அமெரிக்காவில் ஆஸ்கர் விழாவில் திரையிடப்பட்டது. அத்துடன் வசூலில்  பெரும் சாதனை நிகழ்த்தியது.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதுவும் அடுத்து பாண்டிராஜன் இயக்கவுள்ள ஒரு கிராமம் சார்ந்த படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா இயக்கவுள்ள  படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன. 

கொரோனாவால் பாதிப்பட்டு குணமடைந்த சூர்யா வீட்டில் ஓய்வெடுத்துவருவதால் இன்று பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இப்படத்தில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.
webdunia

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

இந்நிலையி கிராமத்துப் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாகத் தகவல் வேகமாகப் பரவிவருகிறது.

ஏற்கனவே நடிகர் சூர்யாவுடன் வடிவேலு, வேல், ஆதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன கன்றாவி போஸ் இது? நல்ல ட்ரஸ் போட்டுக்கிட்டு நாஸ்தியா கிடக்கும் நடிகை!