Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போஸ்டரில் இதைக் கவனீத்தீர்களா… ஒரண்டை இழுத்த வடிவேலு!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போஸ்டரில் இதைக் கவனீத்தீர்களா… ஒரண்டை இழுத்த வடிவேலு!
, சனி, 9 அக்டோபர் 2021 (10:23 IST)
வடிவேலு நடிப்பில் உருவாகும் நாய்சேகர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதால் தற்போது வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சதீஷ் படக்குழுவினரை சீண்டும் விதமாக போஸ்டரில் ‘ஒரிஜினல்’ என்ற வார்த்தையை பதிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை இல்லாத சிவகார்த்திகேயன்… டாக்டர் படத்துக்கு பாஸிட்டிவ் ரிவ்யூஸ்!