Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடிவேலு-சுராஜ் படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

வடிவேலு-சுராஜ் படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (17:17 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதால் தற்போது வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருக்கலைப்பு வதந்திக்கு சமந்தாவின் விளக்கம்!