Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி 2 வில் வடிவேலு இருக்காரா? பி வாசு அளித்த பதில்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:44 IST)
சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு கண்டிப்பாக இருப்பார் என பி வாசு உறுதியளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை தொடங்கியுள்ள பி வாசு, இப்போது கதாநாயகிக்காக அனுஷ்காவிடம் பேசி சம்மதம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அனுஷ்கா தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்த வடிவேலு இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. இதுகுறித்து இயக்குனர் பி வாசு ‘கண்டிப்பாக வடிவேலு இருப்பார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
Source சாய் வித் சித்ரா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments