Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிர்பெற்ற சந்திரமுகி 2 வேலை… ரி எண்ட்ரி கொடுக்கும் கதாநாயகி!

உயிர்பெற்ற சந்திரமுகி 2 வேலை…  ரி எண்ட்ரி கொடுக்கும் கதாநாயகி!
, புதன், 15 செப்டம்பர் 2021 (16:50 IST)
சந்திரமுகி 2 வில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை தொடங்கியுள்ள பி வாசு, இப்போது கதாநாயகிக்காக அனுஷ்காவிடம் பேசி சம்மதம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அனுஷ்கா தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை நச்சரிக்கும் இளையமகள்… குழப்பத்தில் சூப்பர் ஸ்டார்!