பிரபல நடிகை ஜோதிகா இமயமலையில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	நடிகை ஜோதிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார் என்பதும் அவரது முதல் பதிவே மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவர் தனது இரண்டாவது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார்
 
									
										
			        							
								
																	
	 
	இந்த பதிவில் அவர் இமயமலையில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இமயமலையின் எழில் மிகு காட்சிகள் அதில் ஜோதிகா மற்றும் அவரது குழுவினர் செல்லும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இமயமலை பயணம் குறித்த சில வீடியோக்களை அவர் தொடர்ச்சியாக வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்நிலையில் ஜோதிகா சசிகுமாருடன் உடன்பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது