Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுல்தானுக்கு தடுப்பூசி...வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (17:43 IST)
தமிழகத்தில் கொரொனா தொற்றுக் குறைந்து வந்தாலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனவே பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று, தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரும் சூரியாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி சற்று முன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து நான் எனது முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருவதை அடுத்து கார்த்தியின் ரசிகர்கள் நாங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாகக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ இசை விழாவில் ஜோதிகா வராதது ஏன்? மாமனார் - மருமகள் சண்டையா?

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா ப்ரதீப் & விக்னேஷ் சிவன் கூட்டணியின் LIK?

பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பிரபுதேவாவின் ‘யங் மங் சங்’ ரிலீஸ் திட்டம்!

திருப்பதி கோவிலுக்கு பிரபல இயக்குனருடன் சென்ற நடிகை சமந்தா.. மீண்டும் காதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments