Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாத்தி கம்மிங் ஒத்து... வைரலாகும் மைனா நந்தினியின் வெர்ஷன்!

வாத்தி கம்மிங் ஒத்து... வைரலாகும் மைனா நந்தினியின் வெர்ஷன்!
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (09:04 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா கடந்த ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாஸ்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனமாடி டிக் டாக் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய சூப்பர்ஸ்டார்கள் நடித்திருக்கும் குறும்படம்! #Family