Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க போனாலும் கூடவே கூப்பிட்டு போயிடுவீங்களா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
எங்க போனாலும் கூடவே கூப்பிட்டு போயிடுவீங்களா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:45 IST)
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். அந்தவகையில் தற்போது அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கம் FIR என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விறு விறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் , ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என மொத்தம் மூன்று ஹீரோயின்கள் வித்யாசமான ரோல்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷாலே தனது சொந்த நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். அஸ்வந்த் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனது காதலி ஜுவாலா காட்டவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு FIR படத்தின் படப்பிடிப்பை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் "எங்க போனாலும் கூடவே கூப்பிட்டு போயிடுவீங்களா பாஸ்" என கிண்டலடித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Missing shooting of #FIR On set pic with @jwalagutta1

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஸ்சார்ஜ் ஆன கனிகா கபூர்: கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட்!