Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீர்னு கிளம்பிய வதந்தி… வாடிவாசல் பற்றி கலைப்புலி தாணு கொடுத்த அப்டேட்!

திடீர்னு கிளம்பிய வதந்தி… வாடிவாசல் பற்றி கலைப்புலி தாணு கொடுத்த அப்டேட்!
, ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (10:25 IST)
சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுதா கொங்கரா மற்றும் ஞானவேல் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னரே அவர் ஒப்புக்கொண்ட வாடிவாசல் என்ன ஆனது எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வாடிவாசல் தொடங்குவதில் சூர்யா, முன்பு போல ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் சமீபத்தில் படத் தயாரிப்பாளர் தாணு கொடுத்துள்ள அப்டேட்டின் படி “வாடிவாசல் மிகப்பிரம்மாண்டமான படம் என்பதால், முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… திரைக்கதை பணிகளில் தீவிரம்!