Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்த பெற்ற பிறகும் ***** இருக்கீங்க… ரசிகரின் அனாவசிய கேள்விக்கு நச் பதில் கொடுத்த ப்ரணிதா!

குழந்த பெற்ற பிறகும் ***** இருக்கீங்க… ரசிகரின் அனாவசிய கேள்விக்கு நச் பதில் கொடுத்த ப்ரணிதா!
, புதன், 21 டிசம்பர் 2022 (15:01 IST)
நடிகை ப்ரணிதா தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தார்.

நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து ப்ரணிதா மீண்டும் சினிமாவில் நடிக்க, அதற்காக லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களோடு சமூகவலைதளம் மூலமாக கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நபர் அனாவசியமாக “குழந்தை பிறந்த பிறகும் நீங்க எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கீங்க” எனக் கேட்க, அதற்கு பிரணிதா “ நான் நல்ல விஷயங்களை (குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட) பேசுவதற்காக இந்த செஷனை ஆரம்பித்தேன். அதில் வந்து எதற்கு சம்மந்தம் இல்லாத மோசமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்” எனப் பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புது வீடு வாங்கிய ஜி பி முத்து… குவியும் வாழ்த்துகள்!