Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் வரி விதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்.. அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 30 மே 2025 (10:11 IST)
அமெரிக்காவின்  அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க உத்தரவு பிறப்பித்தார். இதில், சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டன. மேலும், பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த உத்தரவுக்கு எதிராக, ஜனநாயக கட்சி ஆட்சி செய்துவரும் 12 மாகாணங்கள், நியூயார்க் நகரத்தில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்ப் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அதிகார வரம்பை மீறுவதாக கருதி, அவற்றை நிரந்தரமாக ரத்து செய்ய உத்தரவிட்டது.
 
இதற்கெதிராக அமெரிக்க அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில், வர்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி, வரி விதிப்பை தற்காலிகமாக மீண்டும் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
அத்துடன், "இந்த வரிகள் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் விதிக்கப்பட்டவை. இவைகளை தற்காலிகமாக நிறுத்துவது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்" எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments