Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த படத்தால் என்னைப் பள்ளியை விட்டு நின்றுவிட சொன்னார்கள்… ஊர்வசி பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (14:12 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ஊர்வசி. கதாநாயகியாக அறிமுகமான ஊர்வசி ஒரு கட்டத்துக்குப் பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடிக்கத் தொடங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த உள்ளொழுக்கு படத்துக்காக ‘சிறந்த குணச்சித்திர நடிகை” விருதைப் பெற்றுள்ளார்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக அறிமுகமான ஊர்வசி, அந்த படத்தின் வெற்றியால் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்துக்குப் பிறகு தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை சமீபத்தைய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “ முந்தானை முடிச்சு படம் வந்தபோது எனக்கு 13 வயதுதான். அப்போது நான் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்த படம் ரிலீஸானதும் பள்ளியில் மாணவர்கள் என் பின்னால் சுற்றத் தொடங்கினர். அதனால் பள்ளி நிர்வாகமே என்னை பள்ளியை விட்டு நின்றுகொள்ள சொன்னது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சில பேர் செட்ல மைக்கக் கூட உடைப்பாங்க… ஆனா லோகேஷ்? –ஸ்ருதிஹாசன் ஆச்சர்யம்!

திரைக்கு வெளியிலான தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.. அதுக்குக் காரணம் அவர்கள்தான் –மாதவன் கருத்து!

‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய படக்குழு!

A சான்றிதழ் கண்டிப்பாகக் கூலி படத்தின் வசூலைப் பாதிக்கும்.. பிரபல தயாரிப்பாளர் பதில்!

நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் படுகொலை.. சிறிய தகறாரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments