விஜய்யின் ''லியோ'' பட இந்தி போஸ்டர் பற்றிய அப்டேட்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (17:08 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ பட புதிய போஸ்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  மாஸ்டர் படத்திற்குப் பின்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளளது.

சமீபத்தில், லியோ படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டிய நிலையில்,  நேற்று லோகேஷ் கனகராஜ் லியோ பட புதிய போஸ்டரை ரிலீஸ் செய்தார்.

Keep calm and prepare for battle  என்ற கேப்சனுடன் இந்த போஸ்டர் வெளியானது. இதில், விஜய் ஆக்ரோசமாக இருந்தார். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு லியோ படத்தின் இந்தி போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பான்  இந்தியா படமாக லியோ படம் வெளியாகவுள்ளதால், அதிக தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது. அதனால், இப்படம் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments