அந்த படத்தை சுற்றி நிறைய நெகட்டிவிட்டி இருக்கு… மார்கோ 2-ஐக் கைவிட்ட உன்னி முகுந்தன்!

vinoth
ஞாயிறு, 15 ஜூன் 2025 (10:55 IST)
தென்னிந்திய சினிமாவில் நன்கறியப்பட்ட நடிகராக இருக்கிறார் உன்னி முகுந்தன். மலையாளப் படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான ‘மார்கோ’ திரைப்படம் கண்டனங்களைப் பெற்றாலும், வசூலை வாரிக் குவித்தது. தமிழிலும் அவர் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளார்.

மார்கோ படத்தின் வன்முறைக் காரணமாக அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த படத்துக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கவே செய்கிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ‘மார்கோ 2’ எப்போது வரும் என அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்து வருகின்றன.

அப்படி ஒரு ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த உன்னி முகுந்தன் “அந்த படத்தை எடுக்கும் திட்டத்தை நான் கைவிட்டு விட்டேன். அந்த படத்தைச் சுற்றி நிறைய நெகட்டிவிட்டி உள்ளது. ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments