Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன லிஸ்ட் கூடிட்டே போகுது… பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்!

vinoth
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (12:19 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ’பராசக்தி’ என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில தினங்களுக்கு  முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது.

ஏற்கனவே இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா என முன்னணி நடிகர்கள் நடிக்கும் நிலையில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments