தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால் மாமா ஆகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி, என்ற படத்தில் நடித்தி வருகிறார். இப்படத்தை வினோத்குமார் இயக்க, ரமம மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மாமா ஆகியிருக்கிறேன். என் தங்கை ஐஸ்சுக்கு ஒரு இளவரசி பிறந்திருக்கிறாள். கடவுள் ஆசிர்வாதம் குழந்தையும் பெற்றோரையும் கடவுள் ஆசிர்வாதம் இருக்கப்பட்டும். இன்ஷா அல்லா எனக் குறிப்பிட்டுள்ளார்.