Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் அறிமுகம் ஆகிறாரா ரகுவரனின் மகன்!

சினிமாவில் அறிமுகம் ஆகிறாரா ரகுவரனின் மகன்!
, சனி, 5 மார்ச் 2022 (14:45 IST)
நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரன் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ரகுவரன் 2008 ஆம் ஆண்டு மறைந்தார். வில்லன், குணச்சித்திரம் எனக் கலக்கிய அவர் ரஜினிக்கு வில்லனாக நடித்த பாட்ஷா உள்ளிட்ட படங்கள் இன்றளவும் அவர் நடிப்பை சிலாகிக்கும் விதமாக அமைந்துள்ளன.

இவர் நடிகை ரோகினியைதான் திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிகளுக்கு ரிஷிவரன் என்ற மகன் இருக்கிறார். படிப்பை முடித்துள்ள அவர் இப்போது தன்னுடைய பெற்றோரைப் போலவே நடிப்பில் ஆர்வமாக இருக்கிறாராம். மணிரத்னம் உள்ளிட்ட சில இயக்குனர்களும் அவரை தங்கள் படத்தில் அறிமுகப்படுத்துவய்தாக நம்பிக்கை அளித்துள்ளார்களாம்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த கேள்வி மட்டும் கூடாது… பத்திரிக்கையாளர்களுக்கு கண்டீஷன் போட்ட ராஷ்மிகா!