Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

65 வயது முதியவர் வேடத்தில் உதயா! சிவாஜி, கமலுக்கு டஃப் கொடுப்பாரா?

Advertiesment
65 வயது முதியவர் வேடத்தில் உதயா! சிவாஜி, கமலுக்கு டஃப் கொடுப்பாரா?
, புதன், 22 ஜூலை 2020 (19:05 IST)
65 வயது முதியவர் வேடத்தில் உதயா!
தமிழ் சினிமாவில் வயதான வேடத்தில் நடிப்பதில் எந்த வித தயக்கமும் காட்டாதவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைமுறையில் நடிகர் விக்ரம் வயதான வேடத்தை அசால்டாக நடிப்பில் அசத்துவார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இளம் நடிகர் ஒருவர் வயதான வேடத்தில் நடிக்க முன் வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரும் உதயா. இவர் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி நடிக்க உள்ளார்
 
செக்யூரிட்டி என்ற தலைப்பில் உருவாக உள்ள இந்த குறும்படத்தில் அவர் 65 வயது முதியவராக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் நடிகரான உதயா 65 வயது முதியவர் வேடத்தில் நடிக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உதயாவின் இயக்கத்தில் உருவாகும் இந்த குறும்படம் ஒரு எமோஷனல் பவர்ஃபுல்லான திரைக்கதை என்று கூறப்படுகிறது கூறப்படுகிறது மேலும் இந்த குறும்படத்தில் கோமல் ஷர்மா, ராஜ் மணிகண்டன் ஜெயசூரியா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த குறும்படம் விரைவில் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் மோகன் ராஜாவின் 3 வயது மகள் கேட்ட அதிர்ச்சி கேள்வி!