Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென டுவிட்டரில் வைரலாகும் #அன்புள்ள_ரஜினிகாந்த் ஹேஷ்டேக்

Advertiesment
அஜித்
, சனி, 4 மே 2019 (22:01 IST)
கடந்த பொங்கல் தினத்தன்று ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நாளில் இருந்து ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் டுவிட்டரில் மோதிக்கொள்ளாத நாளே இல்லை. 
 
பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்த போதிலும் பேட்டையை விஸ்வாசம் வீழ்த்திவிட்டதாக டுவிட்டுக்கள் பதிவாகின. அன்று முதல் இன்று வரை அஜித் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்வதும், ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுப்பதுமாக இருந்தனர்.
 
இந்த நிலையில் இன்று திடீரென #அன்புள்ள_ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கும், #ThalaFansRespectThalaivar  என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்களும் ஷேர் செய்து வருவது தான் ஆச்சரியத்தின் உச்சத்தை அடைய வைத்துள்ளது, திடீரென ஒரே நாளில் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் திருந்துவிட்டார்களா? என்றே எண்ணத்தோன்றுகிறது
 
அதேபோல் தோனியை 'தல' என்று கூறி வரும் அவரது ரசிகர்களிடமும் அஜித் ரசிகர்கள் சமாதானமாக செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"கதாபாத்திரத்துக்காக திருநங்கைகளுடன் 10 நாட்கள் இருந்தேன்" - ஸ்ரீபல்லவி