Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பிற்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்து: 2 நடிகர்கள் பரிதாப பலி

Advertiesment
actors dead
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (07:45 IST)
படப்பிடிப்பிற்காக வேனில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக இரண்டு நடிகர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்காக 'தி ஜோசன் ஒன்ஸ்' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் படப்பிடிப்பிற்காக நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ ஆகியோர் மெக்சிகன் நாட்டிற்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். 
 
அப்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நடிகர் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ ஆகியோர் உயிரிழந்தனர் .
 
இந்த விபத்தில் மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய பைக்கிற்கு தானே பெட்ரோல் நிரப்பும் அஜித்: வைரல் புகைப்படம்