Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தால்....- அருண்விஜய் பேட்டி.

ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தால்....-  அருண்விஜய் பேட்டி.
, ஞாயிறு, 5 ஜூன் 2022 (17:19 IST)
வருங்காலங்களில் ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தால் பெரும் பாக்கியமாகக் கருதுவேன் என்று நடிகர் அருண்விஜய் பேட்டி.......
 
நான் எடுக்கும் திரைப்படங்கள் முதலில் தியேட்டரில் மட்டும்தான் வெளியிடுவேன். என் திரைப்படத்தால் விநியோகஸ்தர்கள் முதல் திரையரங்கின் கடைநிலை ஊழியர் வரை முதலில் பயன் பெறட்டும் என்றும் இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.........
 
தமிழக திரைப்பட நடிகர் அருண் விஜய் நடிப்பில்,இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ள யானை படத்தை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக திரையரங்கில் ரசிகர்கள் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். திரையரங்கில் உள்ள ரசிகர்கள் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரிக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஆரவாரம் செய்தனர். பின்னர் ரசிகர்களுடன் அருண்விஜய் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
இதைத்தொடர்ந்து அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது முதலில் அருண் விஜய்  பேசியது,
 
கொரோனா பாதிப்புக்கு பிறகு சினிமாத்துறை குறித்து பயத்தில் இருந்தோம்,ஆனால் தற்போது நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பும், வசூலும் அதிகளவில் உள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். மேலும் திரைப்படங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தீய விஷயங்களை ரசிகர்கள் விட்டுவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அஜித் நடித்த படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதேபோன்று வருங்காலங்களில் ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடனும் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் பெரும் பாக்கியமாகக் கருதுவேன் என்று கூறியுள்ளார்.
 
 
இதை தொடர்ந்து இயக்குனர் ஹரி கூறும்போது, நான் எடுக்கும் திரைப்படங்கள் முதலில் தியேட்டரில் மட்டும்தான் வெளியிடுவேன். அதன் பின்னர்  ஒடிடியில் வெளியிடட்டும்.
 
நான் எடுக்கும் திரைப்படத்தால்  விநியோகஸ்தர்கள் முதல் திரையரங்கில் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் போடும் கடைநிலை ஊழியர் வரை முதலில் பயன் பெறட்டும் அதன்பின்னர் மற்றவர்களுக்கு பயன் கிடைக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணம்..அதற்காக நான் ஒடிடியில் தேவையில்லை என்று கூறவில்லை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் தான் முதலில் டிவியில் துவங்கி தற்போது ஒடிடி வரை வந்துள்ளது.  
 
ஒடிடியையும் நான் வரவேற்கிறேன் என்றார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணையும் பிரபல நடிகை....?