Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மாதவனின் மகனுக்கு வாழ்த்துகள் கூறிய டிடிவி தினகரன்

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:51 IST)
மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு டிடிவி தினகரன் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

தமிழ் மற்று இந்தி சினிமாவில் முன்னணி நடிகர் மாதவன். இவர் மகன் வேதாந்த்(17 வயது). சிறந்த நீச்சல் வீரரான இவர்,  சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகள் பெற்று  நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்,  50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, 1500 மீ ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்று பெற்று 5 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளதாக நடிகர் மாதவர்  நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப்பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திரு. மாதவன் அவர்களின் மகன் வேதாந்த்துக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments