Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமைப்படுத்துதால் ஏன்? நடிகை த்ரிஷா விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (20:08 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் என்பதை ஒருசிலர் சிறைவாசம் கருதி அஞ்சி நடுங்குகின்றனர். தனிமைப்படுத்துதல் என்பது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காகவும், அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதிக்காமல் இருப்பதற்கும் என இன்னும் பலருக்கு புரிவதில்லை.
 
இந்த நிலையில் தனிமைப்படுத்துதால் ஏன்? என நடிகை த்ரிஷா வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் த்ரிஷா கூறியிருப்பதாவது:
 
கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்ற வைரஸ் மிக சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தனிமைப்படுத்தல் என்பது உங்களை உங்களை இன்சல்ட் செய்யவோ அல்லது டார்ச்சர் செய்யவோ அல்ல. இது முழுக்க முழுக்க உங்களுடைய பாதுகாப்புக்காக தான். உங்கள் குடும்பத்தினர்களின் பாதுகாப்புக்காக குறிப்பாக உங்கள் குடும்பத்தில் உள்ள  குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்புக்காக தான்
 
எனவே தனிமைப்படுத்துதலை கடைபிடித்து தயவுசெய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள். அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும். இவ்வாறு நடிகை திரிஷா கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

விஷாலின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்!.. வெளியான தகவல்!

மீண்டும் இணையும் மெஹந்தி சர்க்கஸ் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments