Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரெண்டாகும் #சுயநலவாதி வெங்கட்பிரபு! அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு! - என்ன காரணம்?

ட்ரெண்டாகும் #சுயநலவாதி வெங்கட்பிரபு! அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு! - என்ன காரணம்?

Prasanth Karthick

, ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (08:33 IST)

சமீபத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ படம் வெளியான நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் பலரும் இயக்குனர் வெங்கட்பிரபுவையும், தயாரிப்பாளரான ஏஜிஎஸ் நிறுவனத்தையும் திட்டி பதிவிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘தி க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time). இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், மீனாட்சி சௌத்ரி, பிரஷாந்த், சினேகா, பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

 

கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களை பெற்றதுடன் நல்ல வசூலையும் குவித்து வருகிறது. இந்த படத்திற்கு ஆடியோ வெளியீடு விழா நடத்தப்படாததால் இயக்குனர் வெங்கட்பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தீவிரமான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.

 

அப்போது அவர்கள் அஜித் இந்த படத்தை பாராட்டியதாக சொன்ன நிலையில் பல அஜித் ரசிகர்களும் வந்து தி கோட் படத்தை பார்த்து கொண்டாடினர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர், பயில்வான் ரங்கநாதனின் ‘தி கோட்’ பட விமர்சனத்தை பகிர்ந்து, தீவிர அஜித் ரசிகரான பயில்வானே தி கோட் படத்தை பாராட்டி இருப்பதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 

 

ஆனால் அதை சற்று ஆபாச வார்த்தைகளால் அவர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் அதை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் ரீபோஸ்ட் செய்ததால் அஜித் ரசிகர்கள் கோபமடைந்தனர். படம் வெளியாகும் வரை அஜித்தை வைத்து ப்ரோமோஷன் செய்து கொண்டு, தற்போது அஜித்தை மோசமான வார்த்தைகளால் பேசியிருக்கும் ஒரு பதிவை ரீபோஸ்ட் செய்திருப்பதை கண்டித்து அவர்கள் சுயநலவாதி வெங்கட்பிரபு, தரம்கெட்ட ஏஜிஎஸ் என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.

 

இதையடுத்து ஏஜிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து ரீபோஸ்ட்டை நீக்கினாலும், தொடர்ந்து இந்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் கைது.. என்ன காரணம்?