Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்ஸிக் கதை உணரப்பட வேண்டியது… இயக்குனர் கீது மோகன்தாஸ் கருத்து!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (08:46 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

தற்போது விறுவிறுப்பாக இந்தபடத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அதில் யாஷ் கே ஜி எஃப் கெட்டப்பிலேயே பார் ஒன்றுக்குள் நடந்து செல்வது போலவும், பெண்களின் கவர்ச்சி நடனம் இடம்பெறுவது போலவும் உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் கீது மோகன்தாஸ் படம் பற்றி பேசும்போது “இது பார்ப்பதற்கான படம் மட்டும் இல்லை. உணரப்பட வேண்டிய ஒன்று. கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த தலைமுறையினருக்கு இயக்குனர் பாலா யார் என்பதை இந்த படம் காட்டும்.. அருண் விஜய் நம்பிக்கை!

சினிமாவை விட்டு விலக நினைத்தேன்…என் மனைவிதான் என்னைத் தேற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

ஓடிடி, சேட்டிலைட் வியாபாரத்தை முடிக்காமலேயே ரிலீஸ் செய்யும் வணங்கான் படக்குழு!

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

அடுத்த கட்டுரையில்