Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தகன் ஸ்டிக்கர் ஒட்டிய ஹெல்மெட்டுகளை வழங்கிய டாப் ஸ்டார்! படத்தை எப்பண்ணா ரிலீஸ் பண்ணுவீங்க?

Top Star Prasanth

Prasanth Karthick

, வெள்ளி, 1 மார்ச் 2024 (10:57 IST)
தமிழ் நடிகர் பிரஷாந்த் வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார்.



தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட பிரஷாந்த் நடித்த ஜீன்ஸ், செம்பருத்தி, மஜ்னு என பல படங்களும் ஹிட் அடித்தன. ஆனால் அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் கம் பேக் கொடுக்கும் வகையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து ஹிட் அடித்த அந்தாதுன் படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் தியாகராஜன் இயக்க பிரஷாந்த் நடித்தார். சிம்ரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் இதுவரை எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.

நாளும், கிழமையும், தீபாவளி, பொங்கல் என்றால் அந்தகன் குழுவின் வாழ்த்து தெரிவித்த போஸ்டர்கள் மட்டும் வந்துக் கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் பிரஷாந்த் தொடர்ந்து சமூக சேவை செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தென் மாவட்டங்கள் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.


தற்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் பாதுகாப்பிற்காக அந்தகன் பட ஸ்டிக்கர் ஒட்டிய இலவச ஹெல்மெட்டுகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் இதையெல்லாம் அவர் செய்து வருவதாக ஒரு பேச்சு இருக்கும் நிலையில், காலத்தின் கட்டாயம் அதுவானால் அதுவும் நடக்கும் என்றரீதியில் ரகசிய ஹிண்ட் கொடுத்துள்ளார் டாப் ஸ்டார்.

இவ்வளவு செய்தாலும் எவ்வளவு நாள்தான் வாழ்த்து போஸ்டர்கள் விட்டுக் கொண்டிருப்பீர்கள்? படம் எப்போது வெளியாகும்? என்பதுவே டாப் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறைவன் மிகப்பெரியவன் பட தயாரிப்பாளர் விவகாரம்.. விசாரணைக்கு தயார் என இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ!