Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் அரசியல் வருகை பற்றி பிரசாந்த் கருத்து!

Advertiesment
விஜய் அரசியல் வருகை பற்றி பிரசாந்த் கருத்து!

Sinoj

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (19:15 IST)
நடிகர் விஜய் அரசியலில் சாதிப்பாரா என்பது குறித்து நடிகர் பிரசாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். இவர் அப்போது, விஜய், அஜித்க்கு போட்டியாக வலம் வந்தார். பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார்.
 
தற்போது, விஜய்யின் The GOAT என்ற படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் முக்கிய கேரக்டரில்  நடித்து வருகிறார். அதேபோல் அந்தகன் என்ற படத்திலும் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.
 
இந்த நிலையில்,  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட்  குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த்,  பொதுமக்களுக்கு ஹெல்மெட்டை இலவசமாக வழங்கினார்.  
 
இதனையடுத்து, செய்தியாளர் சந்திப்பில் அவர்  கூறியதாவது: நெல்லைக்கு ஜாலியாக வந்தேன். இங்கு ஒரு சேவையை செய்துவிட்டு செல்கிறேன். தலைக்கவசம் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த  என் ரசிகர் மன்றம் வாயிலாக நிறைய பணிகள் மேற்கொண்டு வருகிறோம். என்று கூறினார்.
webdunia
மேலும்,  நடிகர் விஜயுடன் நடிக்கும் கோட் பட படப்பிடிப்பு நன்றாகப் போய்கொண்டிருக்கிறது. தமிழில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பது கல்லூரி வாசல் படத்தில் இருந்து தொடங்கிவிட்டது. இப்பட இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பு  நிறுவனத்திற்கு நன்றி. தியேட்டருக்கு வரும் மக்கள் சூப்பர் என்று கூற வேண்டும் என்பதற்காகத்தான்  இதுபோன்ற பிரமாண்ட படங்களை செய்து கொண்டிருக்கிறோம். நடிகர் விஜய்  அரசியல் ஆரம்பித்துள்ளது மிகவும் சந்தோஷமாக  இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவதை காலம் முடிவு செய்யும்.  நடிகர் விஷால் கட்சி ஆரம்பித்தால் அதுவும் நல்ல விஷயம் என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது இடத்தில் சால்வை அணிவித்தது அவரது தவறு: நடிகர் சிவக்குமார்