லியோ திரைப்படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இல்லை என்றும் 80 சதவீத வசூல் தொகையை லலித் பெற்றுக் கொண்டார் என்றும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் 60% பங்கீட்டு தொகையை வாங்கி தமிழகத்தில் மட்டும் எண்பது சதவீதத்தை லலித் பெற்றுக்கொண்டார். இதனால் லியோ திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை.
தீபாவளி வரை வேறுபடம் இல்லை என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததால் பல திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பம் இல்லாமல் தான் லியோ படத்தை திரையிட்டனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிட்டு இருந்தால் நியாயமான லாபம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிடைத்திருக்கும் என்று திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.