Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் துணிவு?

ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் துணிவு?
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:31 IST)
அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் பரவின.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இதையடுத்து வெகுமக்களின் பெரிய பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த டிரைலர் இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 3.4 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி வியாழக் கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாக புதன் கிழமையே ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் துணிவு படம் 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!