Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாக்கி படம் இயக்க ஆசைப்பட்ட மூன்று இயக்குனர்கள்!

விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாக்கி படம் இயக்க ஆசைப்பட்ட மூன்று இயக்குனர்கள்!
, புதன், 24 மே 2023 (08:21 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சஞ்சய் கனடாவில் “புல் தி டிரிகர்” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில் சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்க, இயக்குனர்கள் அல்போன்ஸ் புத்ரன், சுதா கொங்கரா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியவர்கள் முயற்சி செய்ததாகவும், ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் இயக்கத்தில்தான் தனக்கு முழு ஈடுபாடு என சஞ்சய் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் அட்டகத்தி கூட்டணி.. பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?