Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சிந்தனையற்ற செயல்''-.ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி பற்றி புளூ சட்டை மாறன் கருத்து

rahman
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:00 IST)
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ''தவறு சென்னை நகர கட்டமைப்பின் மீதல்ல. நிலவரம் தெரிந்தும் அங்கே நிகழ்ச்சி நடத்திய உங்கள் ஏற்பாட்டாளர்கள் மீதுதான் ’’என்று புளூசட்டை மாறன்  தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி   பற்றி அவர் விளக்கம் அளித்திருந்தார். அதில், '' நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு   பொறுப்பேற்க்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரம்  மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள இன்று நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு இசையமைப்பாளராக எனது வேலை சிறந்த இசை நிகழ்ச்சியை கொடுப்பது மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

மழை மற்றும் பெய்து விடக்கூடாது பிற விஷயங்களை ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற யோசனையில் வெளியில் நடப்பது கொடுத்து தெரியாமல்  மகிழ்ச்சியாக பெர்பார்மன்ஸ் செய்து கொண்டிருந்தேன்’' என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி புளூசட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
 
webdunia

 ’’சென்னை தகவமைக்க வேண்டுமா? OMR சாலை முழுக்க மெட்ரோ ரயில் பணிகள் நடப்பது அனைவருக்கும் தெரியும். அப்பணிகள் முடிய சில ஆண்டுகள் ஆகும்.

அது தெரிந்தும்..அதையொட்டிய பகுதியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது சிந்தனையற்ற செயல்.

நிகழ்ச்சி காண வந்தவர்கள் மட்டுமல்ல. அப்பகுதியில் வசிப்போரும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். முதல்வரின் வாகனமும் அந்த நெரிசலில் சிக்கியதாய் தகவல்.

ஆகவே தவறு சென்னை நகர கட்டமைப்பின் மீதல்ல. நிலவரம் தெரிந்தும் அங்கே நிகழ்ச்சி நடத்திய உங்கள் ஏற்பாட்டாளர்கள் மீதுதான் ’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் நடிகர்களுடன் போட்டி! ரஜினி டைரக்டர் செலக்‌ஷன் சீக்ரெட் இதுதானா?