Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி..மன்னிப்புக் கோரிய ஏற்பாட்டாளர்கள்.. பணத்தை திரும்ப தரவும் ஒப்புதல்..!

Advertiesment
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி..மன்னிப்புக் கோரிய ஏற்பாட்டாளர்கள்.. பணத்தை திரும்ப தரவும் ஒப்புதல்..!
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:08 IST)
இசைப்புயல் ஏஆர் ரகுமான் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் செய்த குழப்பம் காரணமாக டிக்கெட் வாங்கிய பலர் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் திரும்பிச் சென்றனர். 
 
மேலும் தொலைக்காட்சி பேட்டிகளில் அவர்கள் அளித்த ஆதங்கமான பேட்டி இணையதளங்களில் வைரல் ஆனது. ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட் பயன்படுத்த முடியாமல் திரும்பிச் செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
மொத்தம் 20 ஆயிரம் பேர்கள் மட்டுமே அமரும் இடத்தில் அம்பதாயிரம் டிக்கெட்டை கொடுத்து வைத்திருந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த தவறுக்காக மன்னிப்பு கோருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
  ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் திட்டமிட்டதை விட அதிகம் பேர் கலந்து கொண்டதால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், பணத்தை திருப்பி தரவும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? நடிகர் வேல ராமமூர்த்தி விளக்கம்!