Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திறமையில்லாதவர்கள் தான் என் அப்பாவை கிண்டல் செய்கிறார்கள்; நடிகர் சிம்பு ஆவேசம்

Advertiesment
திறமையில்லாதவர்கள் தான் என் அப்பாவை கிண்டல் செய்கிறார்கள்; நடிகர் சிம்பு ஆவேசம்
, ஞாயிறு, 25 மார்ச் 2018 (13:22 IST)
தன் தந்தையான டி.ஆர்.ராஜேந்தரை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு பேசியுள்ளார்.
இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர்தான் டி.ஆர்.ராஜேந்தர். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் டி.ராஜேந்தர் அடுக்குமொழியில் பேசுவதில் வல்லவர். அதேபோல் தன் வாயிலே இசை வாசிப்பார்.
 
இந்நிலையில் டி.ராஜேந்தரின் இந்த செயல்பாடுகளை வைத்து சமூகவலைதளங்களில் பலர் மீம்ஸ்களை உருவாக்கி உலாவ விடுகின்றனர்.
 
இதுபற்றி பேசிய சிம்பு என் அப்பா மிகவும் சிறந்தவர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. ஆனால், நிறைய பேர் அவரை வைத்து மீம்ஸ் உருவாக்கி கலாய்க்கிறார்கள். வாயில் இசை வாசிக்கிறார் என்று கலாய்க்கிறார்கள். உங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள். இந்த வயசிலும் அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். என் அப்பாவிற்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.

கிண்டல் செய்பவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் திறமை இல்லாதவன் தான் செய்கிறான். ஆனால் என் அப்பாவின் திறமையை அங்கீகரித்து மதித்தவர்களை நான் மதிக்கிறேன் வணங்குகிறேன் என்று மனம் உருக பேசியுள்ளார் சிம்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திட்டமிட்டபடி காலா திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சி