Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா - காரணம் தெரிந்தால் கடுப்பாகிடுவீங்க!

Advertiesment
மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா - காரணம் தெரிந்தால் கடுப்பாகிடுவீங்க!
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:42 IST)
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் மெர்சல். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் வெற்றிமாறன், டாக்டர் மாறன் உள்ளிட்ட 3 தோற்றங்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.

தளபதி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் சுமார் ரூ 250 கோடி வரை வசூல் ஈட்டி சாதனை படைத்தது, இந்நிலையில் இப்படத்தை குறித்து இதுவரை வெளிவராத ஷாக்கிங்கான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்தில் நித்யா மேனன் ரோலில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜோதிகா தானாம். படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் இருந்து ஜோதிகா விலகிவிட்டதாக தெரிவித்த சினிமா பிரபலம் ஒருவர் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் நடந்தது இது தான். படத்தில் கதையில் ஒரு சில மாற்றங்களை செய்யுமாறு அட்லீயிடம் கூறினாராம் ஜோதிகா. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து படத்தின் கதைக்கும் ஜோதிகா ரோலுக்கும் உள்ள பந்தத்தை குறித்து அட்லீ விளக்கி அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சித்ததால் ஜோதிகா வேண்டாம் என கூறி விலகி விட்டாராம். இது குறித்து ஜோதிகா கூட நான் விலகியதற்கு தான் காரணம்   Creative Difference தான் வேறு எதுவும் இல்லை" என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் மாஃபியா எனது டிவிட்டர் கணக்கை முடக்கலாம் – கங்கனா டிவீட்டால் பரபரப்பு!