விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள முருகதாஸூக்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படத்துக்கு முதல் முதலில் போடப்பட்ட பட்ஜெட் 180 கோடி ரூபாய். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் பட்ஜெட்டை 130 கோடியாக குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வற்புறுத்தவே இழுபறியான சூழல் உருவானது.
ஆனால் வேறு வழி இல்லாததால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்க முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த 130 கோடியில் சன் பிக்சர்ஸ் விஜய்யின் சம்பளம் 70 கோடியை நேரடியாக விஜய்யிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள 60 கோடியை முருகதாஸிடம் கொடுத்து பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தர சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த 60 கோடியில் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் எல்லாம் கொடுத்து படப்பிடிப்பை நடத்தி முடித்தால் தனக்கு 10 கோடி மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறாராம் முருகதாஸ். ஆனால் அவர் தர்பார் படத்துக்கு வாங்கிய சம்பளம் 30 கோடி ரூபாய். அதனால் இந்த படத்துக்கு இரண்டாம் நிலை தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்து ஷூட்டிங்குக்கு அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.