Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்...போலீஸார் அறிக்கை தாக்கல் !

Advertiesment
நடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்...போலீஸார் அறிக்கை தாக்கல் !
, புதன், 20 ஜனவரி 2021 (16:48 IST)
நடிகை சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதக போலீஸார் விசாரணையில் தகவல் வெளியாகிறது.

 
சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக நசரத் பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயாவும் சித்ராவுக்கு பிரச்சனை கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் ஹேமந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்தனர் போலீஸார்.

இந்நிலையில், சித்ராவின் நடத்தையில் கணவன் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பெட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேரச் சீட்டு வாங்கித் தருவதற்காகப் பண மோசடி செய்தததாக நடிகை சித்ராவின் கணவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தோடு முகம் ஒட்டி... காதலனுடன் நெருக்கமான போட்டோ வெளியிட்ட மீரா மிதுன்!