Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்ரா உதவியாளரை நீக்கிய ஹேமந்த்… எதற்காக தெரியுமா?

Advertiesment
சித்ரா உதவியாளரை நீக்கிய ஹேமந்த்… எதற்காக தெரியுமா?
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:38 IST)
வி ஜே சித்ராவின் கணவர் ஹேமந்த் அவரது உதவியாளரை வேலையை விட்டு நீக்கியதாக அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சின்னத்திரை நடிகர்கள் இதுபோல தற்கொலை செய்துகொள்வது கவலையளிக்கும் விதமாக உள்ளது. இப்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் சந்தேகத்தின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சித்ராவின் முன்னாள் உதவியாளர் சலீம் என்பவர் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஹேமந்த் மற்றும் சித்ராவுக்கு இடையில் இருந்த உறவில் ஏற்பட்டிருந்த சிக்கல் பற்றி எல்லாம் கூறியுள்ளார். அதில் ‘நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் சித்ரா தன்னை அழைத்துச் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் எடுக்க செய்வார். ஆனால் நான் ஆபாசமாக வீடியோ எடுப்பதாக சொல்லி என்னை ஹேமந்த் நீக்கினார். இந்த மரண விவகாரத்தில் போலிஸார் ஹேமந்த்திடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தவித்தார் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னால் தான் என் அப்பா.... குற்ற உணர்ச்சியில் பரிதவிக்கும் அனிதா சம்பத்!