Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்! அமரன் பட ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?

Prasanth Karthick
புதன், 23 அக்டோபர் 2024 (18:19 IST)

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாராகியுள்ள படம் அமரன். சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் தற்போது அமரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அன்பான குடும்ப தலைவராகவும், தேசத்தை காக்கும் அதிரடி ராணுவ வீரராகவும் சிவகார்த்திகேயன் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது. உண்மை கதையை மையப்படுத்திய படம் என்றாலும் நடிப்பு வகையில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
 

ALSO READ: பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’.. அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
 

முதல் காட்சியில் குழந்தைக்கு ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாரதியின் வரிகளை சொல்லி தரும் காட்சி தொடங்கி இறுதியில் ‘இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்’ என பேசும் காட்சி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ட்ரெய்லர் உள்ளது. இந்த படம் அக்டோபர் 31 தீபாவளி அன்று வெளியாகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments