Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் 'அமரன்' இசை வெளியீட்டு விழா: தேதி, இடம் அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் 'அமரன்' இசை வெளியீட்டு விழா: தேதி, இடம் அறிவிப்பு!

Mahendran

, புதன், 16 அக்டோபர் 2024 (18:24 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' படத்தின் இசை வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்த நிலையில், விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
 இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிகட்ட டெக்னிக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி திருநாளில் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படக்குழு நாளுக்கு நாள் வேகமாக பணிகளை முடிக்க முயற்சி செய்து வருகிறது.
 
இந்நிலையில், 'அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டர் இணையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டன்னிங் உடையில் ஜொலிக்கும் சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!