தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே புதுப்பேட்டை, ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து, பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், பேட்டை, கோசலை, ஆகிய நூல்களை எழுதியுள்ள தமிழ்பிரபா தன் டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவனை பற்றி புகழ்ந்து எழுதியுள்ளார்.
அதில், இவரை நேசித்த அளவுக்கு நான் காதலித்த இயக்குனர் தமிழில் இல்லை. சந்திக்க வாய்ப்பு அமையுமா என கல்லூரிக் காலங்களில் ஏங்கியிருக்கிறேன்.இப்போது என்னுடைய திரைக்கதை வசனத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களுள் ஒருவராக இவரே நடிப்பார் என்பதெல்லாம் என்று பதிவிட்டுள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கவுள்ள தங்கலான் படத்தின் ரஞ்சித்துடன் இணைந்து தமிழ்பிரபா வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.