Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் இந்தியன் 2 ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

திருப்பதியில் இந்தியன் 2 ஷூட்டிங்… எப்போது தெரியுமா?
, புதன், 28 டிசம்பர் 2022 (15:40 IST)
இந்தியன்  2 திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடந்து வந்தது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து தற்போது அவரும் ஒரு தயாரிப்பாளராகி படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மாதம் 10 நாள் வீதமாக இந்தியன் 2 ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் அடுத்த ஆண்டு தீபாவளிக்குதான் இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதுவரை சென்னையில் நடந்து வந்த ஷூட்டிங், அடுத்த மாதம் 22 ஆம் தேதி திருப்பதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான செட் வேலைகள் இப்போது மும்முரமாக நடந்து வருகிறதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட்பிளிக்ஸில் சாதனை படைத்த துணிவு…!