Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டுப்பயலே 2 படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த நடிகை அமலாபால்!

Advertiesment
திருட்டுப்பயலே 2 படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த நடிகை அமலாபால்!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:33 IST)
சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான திருட்டு பயலே திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் வெளியாக உள்ளது.

 
 
திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு  தாய்லாந்தில் நடந்தது. அப்போது அமலாபால் படப்பிடிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இயக்குனர் சுசிகணேசன் கூறியுள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள மலை மற்றும் கடல் சார்ந்த பகுதியில் நடப்பதால், செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான உள்ளதாக செய்தி வந்ததால்,  அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார்.
 
இதனை தொடர்ந்து டவர் கிடைக்கும் இடத்தில் இருந்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன அவர், தனது  உதவியாளருடன் படகில் கிளம்ப தயாரானார். இதனால் அதிர்ச்சி அடைந்தோம். பிறகு டவர் கிடைத்த இடத்தில் இருந்து அவர் பேசியபோது, பல நாட்கள் அமலாபாலுடன் போனில் தொடர்பு கொள்ள முடியாததால் அவருடைய அம்மா இப்படி ஒரு மெசேஜ்  அனுப்பியது தெரியவந்தது. அவரை அமலாபால் கடிந்து கொண்டார். 
 
நாங்கள் உடன் செல்லாவிட்டால் அமலாபால் ஊருக்கு புறப்பட்டு போய் அதிர்ச்சி அளித்து இருப்பார் என்று இயக்குனர்  சுசிகணேசன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு அணிகளுக்கு பின்னால் பாஜக - வைரல் கேலி சித்திர வீடியோ