Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா பெயரில் இல்லை: அதிர்ச்சி தகவல்!

போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா பெயரில் இல்லை: அதிர்ச்சி தகவல்!

Advertiesment
போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா பெயரில் இல்லை: அதிர்ச்சி தகவல்!
, சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:30 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள அவரது வேதா நிலையத்தை அவரது நினைவிடமாக மாற்ற உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.


 
 
இதனையடுத்து ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் இருக்கும் போது அதனை அரசு எப்படி கைப்பற்ற முடியும் என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கருத்து தெரிவித்தார்.
 
இதுகுறித்து பிரபல தமிழ் வார இதழ் ஒன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தொடர்பு கொண்டு கேட்டது. அப்போது பேசிய தீபா எங்களது பரம்பரை சொத்தை எங்களுக்கு பிச்சைப்போட அமைச்சர்களுக்கு அவசியம் கிடையாது. அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை களைந்துவிட்டு பின்னர் நினைவிடம் அமைப்பது குறித்து பேசட்டும்.
 
மேலும் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் யார் பெயரில் உள்ளது? ஜெயலலிதா பெயரில் இருக்கா? வேதவல்லிங்குற என்னோட பாட்டி சந்தியா பெயரில் உள்ளது. இதை கைப்பற்ற யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இதற்காக எந்த கோர்ட்டுக்கும் போக தயாரக உள்ளேன். விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீர் கழித்ததால் வாக்குவாதம்: மாணவன் கொலை!