Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடங்கியது ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு: ராஷிகண்ணா பகிர்ந்த புகைப்படம்!

தொடங்கியது ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு: ராஷிகண்ணா பகிர்ந்த புகைப்படம்!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:48 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு தனுஷ் தயாராகி விட்டார்
 
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
 
நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் நஷ்ட ஈடு வழக்கு ஒத்திவைப்பு