Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் எல்லாமே முழு சம்மதத்துடனே நடக்குது: ஷில்பா ஷிண்டே

சினிமாவில் எல்லாமே முழு சம்மதத்துடனே நடக்குது: ஷில்பா ஷிண்டே
, திங்கள், 15 அக்டோபர் 2018 (07:30 IST)

திரை உலகில் எல்லாமே முழு சம்மதத்துடனே நடப்பதாக  பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்து இணையத்தில் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.   ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய பாலிவுட்டைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஷில்பா ஷிண்டே, ''மீ டூ பிரசாரம் ஒரு குப்பை. அந்த நேரத்தை நீங்கள் எளிதாக கடந்து வர வேண்டும். அப்போது மட்டுமே அதைப்பற்றி பேச வேண்டும். நீங்கள் தாமதமாக குரல் கொடுத்தால் உங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்.  எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைத்துள்ளது.

மேலும் எல்லா இடங்களிலும் இந்த விஷயங்கள் நடக்கின்றன. சினிமா துறை மோசமானதல்ல நல்ல துறை தான். இந்தத்துறையின் பெயரை ஏன் கெடுக்கிறார்கள் என தெரியவில்லை. இந்தத்துறையில் கட்டாயப்படுத்தி யாரும் பலாத்காரம் செய்யப்படுவதில்லை. எல்லாம் பரஸ்பர புரிதலில் நடக்கும் கொடுக்கல் வாங்கல் முறைதான். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அதை தவிர்த்துவிடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா, யாஷிகா தோள்களில் கைபோட்ட சிம்பு