Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இண்டர்வெல் இல்லாத ‘கனெக்ட்’: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு!

connect
, திங்கள், 19 டிசம்பர் 2022 (10:53 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கனெக்ட் என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கனெக்ட் படத்தின் ரன்னிங் டைம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே என்றும் இந்த படம் இடைவேளை இல்லாமல் திரையிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்டர்வல் இல்லாமல் கனெக்ட் திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 
 
கனெக்ட் படத்திற்கு இன்டர்வல் இல்லை என்பது பற்றி எங்களுக்கு படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்டர்வல் இல்லாத திரைப்படம் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான திரையரங்குகள் இடைவேளை விட்டு தான் அதை திரையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா சத்யராஜ் அனுபம்கெர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஒரு திகில் கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா தேவி அளித்த புகார்… காமெடியன் நாஞ்சில் விஜயன் கைது!